செய்திகள் :

ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷியா!

post image

ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

கருங்கடல் பகுதியில் ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரிமியா நிலப்பகுதி மற்றும் அந்நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பறந்த உக்ரைன் ராணுவத்தின் 121 டிரோன்களை நேற்று (மே.1) ஒரே இரவில் ரஷியா சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தத் தகவலை ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், கருங்கடல் பகுதியில் ரஷியாவின் கடற்படை தளம் அமைந்துள்ள கிரிமியாவின் செவஸ்டபோல் பகுதியில் இயக்கப்பட்ட 89 டிரோன்களும், கருங்கடல் பகுதியில் 23 டிரோன்கள் அடையாளம் காணப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், செவஸ்டபோல் நகரத்தின் ஆளுநர் மிகாயில் ரஸ்வோஸாயேவ் கூறியதாவது: ”உக்ரைன் டிரோன்கள் மூலம் மிகப் பெரியளவிலான தாக்குதலை நடத்த முயன்றது. ஆனால், ரஷியாவின் கடற்படை மற்றும் நிலம் சார்ந்த விமானப் படையின் கூட்டு முயற்சியினால் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

இத்துடன், இந்தத் தாக்குதலில் க்ராஸ்னோதார் பகுதியில் 4 டிரோன்களும், ஒர்யோல் பகுதியில் 2 டிரோன்களும் மற்றும் பிரயான்ஸ்க், பெல்கோரோத் ஆகிய பகுதிகளில் தலா 1 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா? இணையத்தைக் கலக்கும் விமர்சனங்கள்!

பிரதமா் மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உள்ளது; பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்த... மேலும் பார்க்க

உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமா... மேலும் பார்க்க

‘உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை’

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா். இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: ர... மேலும் பார்க்க

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது தன்னிச்சையான நடவடிக்கை எனக் கூறி ராஜீய ரீதியாக நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு, சட்டம், நீா் வளம் ஆகிய அமைச்சகங்களிடையே... மேலும் பார்க்க

காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

காஸாவிற்கு உதவி பொருள்கள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக அந்தப் பொருள்களைக் கொண்டுவந்த சேவை அமைப்பு குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

நீண்ட வாழ்வின் ரகசியம்! என்ன சொல்கிறார் உலகின் மூத்த பெண்!

உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது. உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவ பெண் துறவியான இனாஹ் ... மேலும் பார்க்க