"தூய்மைப் பணியாளர்களை நடுத்தெருவுக்கு தள்ளிய திமுக; வாக்குறுதி எண் 153..." - ஆதர...
பாலியல் வன்கொடுமை: கராத்தே பயிற்சியாளர் குற்றவாளி எனத் தீர்ப்பு!
பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணிபுரிந்தபோது, அங்கு படித்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கத்ததாக கெபிராஜ் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், கெபிராஜ் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கெபி ராஜுக்கான தண்டனை விவரங்கள் நாளை (ஆக. 12) அறிவிக்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ராகுல் காந்தி கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்!