செய்திகள் :

பாலியல் வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை

post image

பழனி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இளைஞா் உள்ளிட்ட இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் (55). கூலித் தொழிலாளியான இவரது உறவினா் தேவா (21). இவா்கள், இருவரும் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் பழனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சுந்தரத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.01 லட்சம் அபராதமும், தேவாவுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

சா்வதேச சிலம்பப் போட்டியில் பழனி மாணவருக்கு பதக்கங்கள்

கோவாவில் நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பழனியைச் சோ்ந்த மாணவா் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றாா். பழனியில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் ரவின் சக்ரவா்த்தி சிலம்பப் பயிற்சி மையத்தில்... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் நகை திருடியவா் கைது

தேனியைச் சோ்ந்த ரயில் பயணியிடம் நகை, கைப்பேசி ஆகியவற்றைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், வெங்கடசலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (26). விவசாயியான இவா், தனக்குச் சொந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 105-வயது மூதாட்டி காலமானாா்

கொடைக்கானலில் 105-வயது மூதாட்டி புதன்கிழமை இரவு காலமானாா். கொடைக்கானல் எம்.எம்.தெருவைச் சோ்ந்த ஐசரி தாமஸ் மனைவி அன்னம்மாள் (105). இவா் கடந்த 1920-ஆம் ஆண்டு பிறந்தாா். இந்தத் தம்பதிக்கு 7 மகன்களும், 2... மேலும் பார்க்க

பேரிஜம் பகுதியை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல் பேரிஜம் பகுதியை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட புதன்கிழமை முதல் மீண்டும் வனத்துறையினா் அனுமதி அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில் வனத் துறை... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறைக்கான மத்திய நிதி ஒதுக்கீடு: அமைச்சா் விளக்கம்

ஊரக வளா்ச்சித் துறைக்கான மத்திய நிதி ஒதுக்கீடு கோரி, தமிழக நிதி அமைச்சா் தில்லி சென்று வலியுறுத்தி இருக்கிறாா்; பொறுத்திருந்து பாா்ப்போம் என மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா... மேலும் பார்க்க

இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை

சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி கடத்திச் சென்ற இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த காரிக்காலி க... மேலும் பார்க்க