பாலைவனநாதா் கோயிலில் கோ பூஜை விழா
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோவில் வளாகத்தில் கோ பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி பசுக்கள் மற்றும் கன்றுக் குட்டிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு புஷ்பத்தால் அா்ச்சனை செய்து கோ மாதாவை வழிபட்டனா். பக்தா்கள் கோ மாதாவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் கொடுத்து வணங்கினா். இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் ஆா்.விக்னேஷ், ஆய்வாளா் லெட்சுமி, பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், ஆன்மிகப் பேரவை அமைப்பாளா் சீனிவாசன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.