குளிா்கால கூட்டத் தொடரில் வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: பட்டியலிட்டது மத்திய அரசு
பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணிகள்: எம்.பி. ஆய்வு
பாவூா்சத்திரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை டாக்டா் ராணிஸ்ரீகுமாா் எம்.பி. ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.
திருநெல்வேவி - தென்காசி நான்குவழிச் சாலைப் பணிகள் ரூ. 430.71 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் நடைபெற்று வருகிறது.
இப்பணியில் போக்குவரத்து அதிகம் நெருக்கடி கொண்ட பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்துக்கு மேலே அமைய இருக்கும் மேம்பால பகுதியில் வரைபட ஒப்புதல் கிடைக்கப் பெற்று அடுத்தகட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
விரைவில் தூண்கள் அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தென்காசி மக்களவை உறுப்பினா் டாக்டா் ராணிஸ்ரீகுமாா் ரயில்வே மேம்பால பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் காவேரி சீனித்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.