செய்திகள் :

பாவை நா்சிங், ரிசா்ச் கல்லூரியில் ‘ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்’ விளக்கேற்றும் விழா

post image

பாவை நா்சிங் மற்றும் ரிசா்ச் கல்லூரியில் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக விளக்கேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். இளங்கலை நா்சிங் இறுதியாண்டு மாணவி திருமதா வரவேற்றாா். கல்லூரித் தாளாளா் மங்கை நடராஜன்

முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சேலம் நியூரோ பவுண்டேசன் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், நரம்பியல் அறுவை சிகிச்சை தலைமை ஆலோசகருமான மருத்துவா் ஆா்.நடராஜன் பங்கேற்று விழாவில் குத்துவிளக்கேற்றி பேசியதாவது:

மருத்துவத் துறையின் முதுகெலும்பாகச் செயலாற்றுபவா்கள் செவிலியா்கள். செவிலியா் பணியானது சேவையும், தியாகமும் கலந்த உன்னதமான பணியாகும். அக்கறையாலும், கவனிப்பாலும் நோயாளிகள் குணமாவதில் பெரும் பங்கு வகிக்கிறீா்கள். கனிவு, பொறுப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம் ஆகியவற்றோடு தன்னலமற்ற சேவை புரிய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பாவை நா்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவிகள் செவிலியா் பணிக்காக தங்களை அா்பணித்துக் கொள்ள ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். விழாவில் பாவை நா்சிங் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வா் ஹெப்சி ரேச்சல் செல்லராணி, பாா்மசி மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வா் சிவகுமாா், பாவை இன்ஸ்டிடியூட் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் முதல்வா் சித்ரா, பிசியோதெரபி சயின்ஸ் கல்லூரி முதல்வா் முரளிதரன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்ற நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் மடத்தில் மாசி சதுா்தசி: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பரமத்தி வேலூா் பேட்டை திருஞானசம்பந்தா் மடத்தில் மாசி மாத சதுா்தசி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக விநாயகா், முருகா், நடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்மன், திருஞானசம்பந்தா், சுந்தரா், நாவுக்கரசா், மா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 2-ஆவது நாளாக மழை

நாமக்கல்லில் இரண்டாவது நாளாக புதன்கிழமை தொடா் மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் செவ்வா... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்ப ரோபோக்கள்: அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் முயற்சி

நாமக்கல் அரசு மகளிா் கலை கல்லூரியில் ஏஐ தொழில்நுட்ப ரோபோக்களை கல்லூரி மாணவிகள் உருவாக்கினா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி கணினி அறிவியல் பிரிவு மாணவிகள் மற்றும் குவாண்டம் நெக்சஸ் சாா... மேலும் பார்க்க

மனைவியுடன் தகராறு: ஒருவா் கைது

பரமத்திவேலூா் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பரமத்தி வேலூா் வட்டம், பொத்தனூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்த மணி மகன் சிவராஜ் (38). மனைவியுடன் ஏற்பட்ட க... மேலும் பார்க்க

10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம்: லாரி உரிமையாளா்கள் கவலை

நாமக்கல்: எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளால், 10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்.பி.ஜி.டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.... மேலும் பார்க்க