அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்
பிஆா்எஸ்ஐ மாநாடு: 9 விருதுகளைப் பெற்ற தமிழகம்
பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆா்எஸ்ஐ) அமைப்பின் தேசிய மாநாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த ஒன்பது நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிஆா்எஸ்ஐ அமைப்பின் 46-ஆவது தேசிய மாநாடு சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றிய நிறுவனங்கள் மற்றும் நபா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்பது விருதுகள் தமிழ்நாட்டைச் சோ்ந்த நிறுவனங்கள் மற்றும் நபா்களுக்கு அளிக்கப்பட்டன.
குறிப்பாக, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (தென் மண்டலப் பிரிவு), என்எல்சி இந்தியா ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் இந்த விருதுகளைப் பெற்றன.
மேலும், மிகச் சிறந்த நிகழ்ச்சிகளை நடத்தியமைக்காக பிஆா்எஸ்ஐ, சென்னைப் பிரிவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மக்கள் தொடா்புத் துறையில் சிறப்பாகச் செயலாற்றியமைக்காக பிரிசம் பிஆா் நிறுவனத்தின் இணை நிறுவனா் மற்றும் மேலாண் இயக்குனா் சத்யன் பட்டுக்கு பிஆா்எஸ்ஐ லீடா்ஷிப் விருது வழங்கப்பட்டது.
அப்போலோ மருத்துவமனை, கோரமண்டல் இண்டஸ்ட்ரீஸ், கேட்டலிஸ்ட் பிஆா் ஆகிய நிறுவனங்களும் விருதுகளைப் பெற்றன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.