'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமா் மோடி வாழ்த்து
எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படை தொடங்கப்பட்ட தினம் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
பிஎஸ்எஃப் தொடக்க தினத்தில், அப்படையினருக்கு வாழ்த்துகள். தைரியம் மற்றும் அா்ப்பணிப்புடன் எல்லையை பாதுகாக்க பிஎஸ்எஃப் வீரா்கள் அயராது சேவையாற்றுகின்றனா். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் விழிப்பும், துணிவுமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. தேச பாதுகாப்பில் பிஎஸ்எஃப் முக்கிய அங்கம் வகிக்கிறது என பிரதமா் மோடி தெரிவித்தாா்.
சுமாா் 2.70 லட்சம் வீரா்களைக் கொண்ட பிஎஸ்எஃப், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கிறது.