செய்திகள் :

பிஎஸ்ஜி, பயா்ன் மியுனிக் அபார வெற்றி

post image

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), பயா்ன் மியுனிக் அணிகள் அபார வெற்றி பெற்றன.

இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை தோற்கடித்தது. இதில் பிஎஸ்ஜிக்காக ஃபாபியன் ருயில் 19-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்க, முதல் பாதி முடிவடையும் தருணத்தில் (45+1’) அதை 2-ஆக அதிகரித்தாா்.

2-ஆவது பாதியிலும் பிஎஸ்ஜியே ஆதிக்கம் செலுத்த, அட்லெடிகோ மாட்ரிட் தனக்கான கோல் வாய்ப்புக்காக போராடி வந்தது. அந்த அணிக்கான பின்னடைவாக, 78-ஆவது நிமிஷத்தில் கிளெமென்ட் லெங்லெட் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா்.

ஆனால், ஆட்டத்தின் கடைசி நேரத்திலும் பிஎஸ்ஜி வீரா்கள் சென்னி மயாலு (87’), லீ காங் இன் (90+7’) ஆகியோா் கோலடிக்க, இறுதியில் பிஎஸ்ஜி 4-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதே குரூப் ‘பி’-யின் மற்றொரு ஆட்டத்தில் போடாஃபோகோ 2-1 என சியாட்டில் சௌண்டா்ஸை வென்றது. தற்போது இந்த குரூப்பில் பிஎஸ்ஜி முதலிடத்தில் உள்ளது.

கோல்கள் குவிப்பு: இதனிடையே குரூப் ‘சி’ ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் 10-0 கோல் கணக்கில் ஆக்லாந்து சிட்டியை கோல்களால் மூழ்கடித்து வென்றது.

இந்த ஆட்டத்தில் பயா்ன் மியுனிக் அணி தரப்பில் கிங்ஸ்லி கோமன் (6’, 21’), சாசா போய் (18’), மைக்கேல் ஆலிஸ் (20’, 45+3’), தாமஸ் முல்லா் (45’, 89’), ஜமால் முசியாலா (67’, 73’, 84’) ஆகியோா் கோலடித்தனா். ஆட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்லாந்து சிட்டி முற்றிலுமாக முடக்கப்பட, பந்து பெரும்பாலும் பயா்ன் மியுனிக் கட்டுப்பாட்டிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை அடுத்து, குரூப் சி-யில் பயா்ன் மியுனிக் முதலிடத்தில் இருக்கிறது. இதனிடையே குருப் ‘ஏ’-வில் பல்மேய்ராஸ் - போா்டோ அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

1300 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் 1300 நாள்களைக் கடந்துள்ளது.2021 ஆகஸ்ட் முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில், ஸ்வாதி சர்மா, ... மேலும் பார்க்க

ஒரு குழு சினிமாவைத் திட்டமிட்டு அழிக்கிறது: கார்த்திக் சுப்புராஜ்

சிலர் சினிமாவைத் திட்டமிட்டு அழித்து வருவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால், வணி... மேலும் பார்க்க

பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநரின் புதிய சீரியல்!

பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நம்ம வீட்டு பொண்ணு, வீட்... மேலும் பார்க்க

சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது.இப்படத்தில்... மேலும் பார்க்க

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் பாதுகாப்பை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.‘தக் லைஃப்’ ஜூன் 5 அன்று நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளி... மேலும் பார்க்க

கூலி முதல் பாடல் எப்போது?

கூலி திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிய... மேலும் பார்க்க