செய்திகள் :

ஒரு குழு சினிமாவைத் திட்டமிட்டு அழிக்கிறது: கார்த்திக் சுப்புராஜ்

post image

சிலர் சினிமாவைத் திட்டமிட்டு அழித்து வருவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால், வணிக ரீதியாக அப்படம் வெற்றியையும் பதிவு செய்தது.

படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் கதையாக ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களின் கலவைபோல் இருந்ததால் கார்த்திக் சுப்புராஜ் விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “நான் விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆக்கப்பூர்வமான பார்வையாக இருந்தால் மட்டுமே கவனம் செலுத்துவேன். ஆனால், இப்போதெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்மறையான விமர்சனங்களைச் செய்கின்றனர்.

அதிலும், எனக்குத் தெரிந்து ஒரு குழு இருக்கிறது. அவர்கள் சினிமாவையே அழிக்க முயற்சி செய்கின்றனர். இதற்கென்ற அந்த அலுவலகம் செயல்படுகிறது. மது குடிப்பதைத் தடுக்கலாம். ஆனால், சினிமா பார்ப்பதைத் தடுக்க முடியுமா? நல்ல திரைப்படங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சிம்பு - வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

முகேனின் ராவ்வின் ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் முகேன் ராவ் தற்போது நடிகராக நடித்து வருகிறார். வேலன் படத்தின் மூலம் தம... மேலும் பார்க்க

வெற்றிக்கான ரசிகசியம் என்ன? சிறகடிக்க ஆசை நாயகியின் பதிவு

வெற்றிக்கான ரசிகசியம் குறித்து சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இதுதான்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உருவெடுத்ததிலிருந்து கவனமாகக் கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்.... மேலும் பார்க்க

புதிய படங்களில் ஒப்பந்தமாகிவரும் காவ்யா அறிவுமணி!

சின்ன திரையில் நடித்து பிரபலமடைந்த காவ்யா அறிவுமணி ஏராளமானப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குற... மேலும் பார்க்க

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருமா? - நம்பிக்கையும் உண்மையும்

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வராதா? பாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்த்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாமா? நெஞ்சு வலி மட்டுமே மாரடைப்பின் அறிகுறியா?இதய நோய்கள் தொடர்பான தவறான நம்பிக்கை... மேலும் பார்க்க

ரேஷ்மா பசுபுலேட்டி நாயகியாக நடிக்கும் புதிய தொடர்!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கில் மகுவா ஓ மகுவா என்ற பெயரில் ஒளிபரப்பான வெற்றித் தொடர், தமிழில் மறுஉருவாக்கம் ச... மேலும் பார்க்க