செய்திகள் :

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இதுதான்!

post image

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உருவெடுத்ததிலிருந்து கவனமாகக் கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் அடுத்தடுத்து மதராஸி, பராசக்தி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.

இதில், பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்.

இந்த நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் குட் நைட் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: எம். ஜி. ஆர். தேடிக்கொண்டிருந்த ஜோதிடர் யார்?

இஸ்ரேல் - ஈரான் போர்ப் பதற்றத்துக்கு இடையே ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்ஸியை பெற்ற டிரம்ப்!

கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார். ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக இருக்கும் அன்டோனியோ கோஸ்டா ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை... மேலும் பார்க்க

ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

முகேனின் ராவ்வின் ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் முகேன் ராவ் தற்போது நடிகராக நடித்து வருகிறார். வேலன் படத்தின் மூலம் தம... மேலும் பார்க்க

வெற்றிக்கான ரசிகசியம் என்ன? சிறகடிக்க ஆசை நாயகியின் பதிவு

வெற்றிக்கான ரசிகசியம் குறித்து சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில... மேலும் பார்க்க

புதிய படங்களில் ஒப்பந்தமாகிவரும் காவ்யா அறிவுமணி!

சின்ன திரையில் நடித்து பிரபலமடைந்த காவ்யா அறிவுமணி ஏராளமானப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குற... மேலும் பார்க்க

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருமா? - நம்பிக்கையும் உண்மையும்

ஃபிட்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வராதா? பாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்த்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாமா? நெஞ்சு வலி மட்டுமே மாரடைப்பின் அறிகுறியா?இதய நோய்கள் தொடர்பான தவறான நம்பிக்கை... மேலும் பார்க்க