"டங்ஸ்டன் விவகாரத்தில் வடிவேலு போல முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்கிறார்" - செல்லூ...
பிகாரின் மதுபானி சேலையை அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!
மத்திய பட்ஜெட்டை மத்திய நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு பட்ஜெட்டுக்கும் அவர் அணிந்துவரும் சேலை மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் நிலையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிர்மலா சீதாராமனின் சேலை தனிக்கவனம் பெற்றுள்ளது.
அந்தவகையில் பத்ம விருதுபெற்ற துலாரி தேவி வடிவமைத்த பிகாரின் மதுபானி கலை வேலைப்பாட்டுடன் கூடிய வெண்மை நிறச் சேலையை அணிந்துள்ள நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.
அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்குச் செல்லும் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றுள்ளார்.