பிகார் தேர்தல்: நிதீஷ் குமார் - ஜெ.பி. நட்டா ஆலோசனை!
பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் நிதீஷ் குமார், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ளது. 2025 ஆம் ஆண்டு இறுதியில் பிகார் மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து பாட்னாவில் அரசு விருந்தினர் இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவும் முதல்வர் நிதீஷ் குமாரும் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
பிகார் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முன்கூட்டிய தேர்தல் பணிகள் குறித்து இரு தரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.