போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு; 144 தடை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு! -டென்ஷனில்...
'பிகார் பட்ஜெட்', 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' - ஜெயக்குமார்
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பிகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப். 1 அன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது, தேர்தல் நடைபெறும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை என தமிழக அரசியல் கட்சியினர் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய பட்ஜெட், பிகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க | மருத்துவக் கழிவு: வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உத்தரவு!
"பட்ஜெட்டில் திருக்குறள் வாசிக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது. தமிழை மட்டும் வசிக்கிறீர்கள், தமிழ்நாட்டிற்கு என்ன செய்தீர்கள்?
அண்ணா கூறியதுபோல 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்பது போலத்தான் உள்ளது" என்று கூறினார்.
பின்னர் திமுகவை விமர்சித்த அவர், "அண்ணாவின் பெயரை சொல்ல திமுகவுக்கு அருகதை இல்லை. அனைத்துக்கும் கருணாநியின் பெயரை வைக்கிறார்கள். அண்ணா பெயரை எதற்கும் வைப்பதில்லை.
மக்களை ஏமாற்ற, தேர்தலுக்கு மட்டும் அண்ணா, அண்ணா.. என்கிறார்கள். அறிவாலய விசாரணை அதிகாரி ஆர்.எஸ். பாரதி. ஈ.சி.ஆர். விவகாரத்தில் தமிழ்நாடே சிரிக்கிறது. அதில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் யாருக்கும் அரசியல் பின்புலம் இல்லை என்றார்கள். அழுத்தம் காரணமாக காவல்துறை மாற்றி மாற்றிச் சொல்கிறார்கள்" என்றார்.