செய்திகள் :

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியல்!

post image

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கத் தகுதியற்ற நபர் யார்? என்பது குறித்து தேர்வு செய்யப்படும். இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தலா இரு நபர்களை நாமினேஷன் செய்யலாம்.

அதிக நாமினேஷன் வாங்கிய நபர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெறுவர்.

அந்தவகையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 21) பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரு நபர்களை தக்க காரணங்களுடன் கூறினர்.

இதில், அதிக போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்டு, வெளியேறும் நபர்களின் பட்டியலில் 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, முதலில் ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, சத்யா, முத்துக்குமரன், செளந்தர்யா, தர்ஷா குப்தா, அருண் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு இந்த வாரம் முழுக்க ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெறும் நபர் வீட்டிற்குள் இருக்க அனுமதிக்கப்படுவர்.

மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கத் தகுதியற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டு இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்.

இதற்கு முந்தைய இரு வாரங்களில் குறைந்த வாக்குகளைப் பெற்று ரவீந்தரும், அர்ணவும் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸில் புது வரலாறு: மீண்டும் கேப்டனானார் தர்ஷிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக ஒருநபர் கேப்டனாகியுள்ளார் என்றாலும், மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்... மேலும் பார்க்க

லப்பர் பந்து - ஓடிடி தளத்தில் எப்போது வெளியீடு?

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘லப்பர் பந்து’ திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்னும் சில நாள்களில் வெளியாகவுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான ‘லப்பர் பந்து’ படத்தில் அட்டகத்தி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் டிரைலர்!

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்... மேலும் பார்க்க

சிம்பு - 49 அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்ப... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்கும் ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல் டீசர்!

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவான சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்... மேலும் பார்க்க

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவக்கம்!

நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட... மேலும் பார்க்க