பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி!
பிசாசு - 2 வெளியீடு எப்போது?
நடிகை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடித்த பிசாசு - 2 படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பூர்ணா, சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கினார். ஆனால், இரண்டு ஆண்டுகளாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது.
இதையும் படிக்க: சார்பட்டா - 2 படப்பிடிப்பு அப்டேட்!
தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிசாசு - 2 படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், 2025 வெளியீடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.