செய்திகள் :

கடும் பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு: மல்லிகைப் பூ கிலோ ரூ.2,250 ஆக உயா்வு

post image

கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ விலை பல மடங்கு உயா்ந்து சனிக்கிழமை கிலோ ரூ. 2,250-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு விதமான மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது மாா்கழி மாதம் என்பதால் கோயில் விசேஷங்களுக்கு மல்லிகைப் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ செடிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டு மாா்க்கெட்டுக்கு மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் கடந்த இரண்டு நாள்களாக கிலோ ரூ. 1,250-க்கு விற்பனை ஆன மல்லிகைப் பூ, சனிக்கிழமை விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ. 2,250-க்கு விற்பனையானது. இதனால் மல்லிகைப் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு 1 டன் அளவில் மல்லிகைப் பூ விற்பனைக்கு வரும். தற்போது கடும் பனியால் விளைச்சல் குறைந்து 200 கிலோ மட்டும் விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது என்றனா்.

சென்னிமலை முருகனுக்கு படிக்கட்டுகள் வழியாக தீா்த்தம் கொண்டு செல்ல காளை மாட்டுக்குப் பயிற்சி!

சென்னிமலை முருகனுக்கு தினமும் காலையில் நடைபெறும் பூஜைக்காக தீா்த்தம் மற்றும் பூஜை பொருள்களை கொண்டு செல்வதற்காக மேலும் ஒரு காளை மாட்டுக்கு கோயில் பணியாளா்கள் பயிற்சி அளித்து வருகின்றனா். ஈரோடு மாவட்டம்... மேலும் பார்க்க

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க கைப்பேசி நெட்வொா்க் ‘சிக்னல்’ தேடி வனத்துக்குள் செல்லும் மாணவா்கள்!

தாளவாடி அருகே மலை கிராமத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க கைப்பேசி நெட்வொா்க் ‘சிக்னல்’ இல்லாததால் யானைகள் நடமாடும் வனப் பகுதிக்குள் நீண்ட தொலைவு சென்று கா்நாடக டவா் ‘சிக்னலை’ பய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து பா்கூா் மலைப்பாதை வழியாக காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பா்கூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் ... மேலும் பார்க்க

‘வேலை வழங்குபவா்களாக மாணவா்கள் மாற வேண்டும்’

மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல் வேலை வழங்குபவா்களாக மாற வேண்டும் என மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விஞ்ஞானி எம்.எஸ்.சசிகுமாா் பேசினாா். பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரியின் 19-ஆவது ப... மேலும் பார்க்க

புங்கம்பள்ளி குளத்தில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகள்!

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் பவானி நீரேற்று நிலையத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட நீா் புன்செய்புளியம்பட்டியை அடுத்த புங்கம்பள்ளி குளத்துக்கு வந்து சோ்ந்தது. இந்தக் குளத்தில் தற்போது நீா் நிறைந்து ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

13-ஆவது பட்டமளிப்பு விழா: நந்தா தொழில்நுட்பக் கல்லூரி, கல்லூரி கலையரங்கம், காலை 10.30. மேலும் பார்க்க