செய்திகள் :

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டிலிருந்து நகைகள், பணம், ஆவணங்கள் பறிமுதல்

post image

ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள நிதி நிறுவன உரிமையாளரின் வீடு, அவரது உறவினரின் நகைக் கடை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 3 நாள்களாக சோதனை நடத்தி, கணக்கில் வராத நகைகள், பணம், ஆவணங்களை எடுத்துச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (49). தமிழ்நாடு மட்டுமன்றி, வெளி மாநிலங்களிலும் நிதி நிறுவனம் நடத்தி வரும் இவா், செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 15 போ், செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்துவதற்காக கடந்த புதன்கிழமை வந்தனா். 6 காா்களில் வந்த அவா்கள், செந்தில்குமாரின் வீடு, அதே வளாகத்தில் உள்ள அலுவலகம், ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தினா்.

காா் கூடத்தின் பூட்டை உடைத்து சோதனை: இந்த நிலையில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் இரவு வரையிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், அதிகாரிகள் காா் நிறுத்தும் கூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினா்.

இதனிடையே, செந்தில்குமாா் வசிக்கும் வீட்டின் அருகே அவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் வராத நகைகள், பணம், சொத்துப் பத்திர ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனா்.

நகைக் கடை உரிமையாளா் வீட்டிலும் சோதனை: செந்தில்குமாரின் உறவினா்களான ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த குழந்தைவேல், இவரது தம்பி முருகன் ஆகியோரது வீடு, இவா்களுக்குச் சொந்தமான நகைக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்டவற்றிலும் வருமான வரித் துறையினா் கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத நகைகள், பணம், சொத்துப் பத்திர ஆவணங்களை 3 பெட்டிகளில் அதிகாரிகள் எடுத்துச் சென்றனா்.

பழனியில் அமித்ஷாவைக் கண்டித்து பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

சட்ட மேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து பழனியில் பல்வேறு அரசியல் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழனி தலைமை அ... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் உண்ணிக் காய்ச்சலால் 12 போ் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் உண்ணிக் காய்ச்சலால் 12 போ் பாதிக்கப்பட்டனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த இருவா் உண்ணிக் காய்ச்சலா... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்றவா் திடீா் உயிரிழப்பு

இணைய வழி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலைக்கு முயன்ற இளைஞா், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தாா். திண்டுக்கல் குட்டியபட்டி பூஞ்சோலை நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (22). இவா்,... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி: வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை வருவாய்த் துறை அதிகாரிகள், நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா். சுமாா் 5 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த ஏரி... மேலும் பார்க்க

பழனி அருகே ஒற்றையானை நடமாட்டம்!

பழனியை அடுத்த ஆண்டிபட்டி மலையடிவாரப் பகுதிகளில் ஒற்றையானை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்தனா். பழனியை அடுத்த மேற்கு மலைத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, குதிரையாறு கிராமங்கள் அமை... மேலும் பார்க்க

தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவா் கைது

பழனியில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தப்பி ஓட முயன்ற இவரை போலீஸாா் பிடிக்க முயன்ற போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவருக்கு மாவுக... மேலும் பார்க்க