மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை: பாடகர் சர்ச்சை பேச்சு!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் உண்ணிக் காய்ச்சலால் 12 போ் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் உண்ணிக் காய்ச்சலால் 12 போ் பாதிக்கப்பட்டனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த இருவா் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதனிடையே, திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து பகுதியைச் சோ்ந்த சத்தியமேரி (47) என்பவா் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், திண்டுக்கல் நாயக்கா் புதுத் தெரு பகுதியைச் சோ்ந்த 45 வயது ஆண் உள்பட 4 போ் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 12 பேருக்கு உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.