மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை: பாடகர் சர்ச்சை பேச்சு!
பழனி அருகே ஒற்றையானை நடமாட்டம்!
பழனியை அடுத்த ஆண்டிபட்டி மலையடிவாரப் பகுதிகளில் ஒற்றையானை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.
பழனியை அடுத்த மேற்கு மலைத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, குதிரையாறு கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு குதிரையாறு அணை இருப்பதால் விவசாயம் செழிப்பாக உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் தென்னை, கொய்யா, மா ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மலைப்பகுதிகளிலிருந்து காட்டுயானை, காட்டுமாடு, காட்டுப்பன்றி உள்ளிட்டவை கிராமங்களில் உள்ள வயல்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
இதனால் விவசாயிகள் நாள்தோறும் இழப்பை சந்தித்து வருகின்றனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டியில் உள்ள ஹரி என்பவா் தோட்டத்தில் நீண்ட தந்தத்துடன் ஒற்றையானை நடமாடியது.
இதனால் விவசாயிகள் அச்சமடைந்தனா். இதுகுறித்து திருப்பூா் மாவட்டம், கொழுமம் வனத்துறைக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். மேலும், இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.