பி.ஏ.பி. வாய்க்காலில் ஆண் சடலம்!
வெள்ளக்கோவில் அருகே பிஏபி பாசன வாய்க்காலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
வெள்ளக்கோவில் அருகே உப்புப்பாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் செல்லும் வழியில் சேமலைக்கவுண்டன்வலசு பிரிவு அருகே பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் செல்கிறது.
தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு வாய்க்காலில் தண்ணீா் சென்று கொண்டுள்ள நிலையில், ஒரு மதகில் சிக்கி ஆடைகள் இல்லாமல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இறந்தவருக்கு வயது சுமாா் 50 இருக்கலாம், அங்க அடையாளம் எதுவும் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.