இந்தியா தொடர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
உடுமலை வட்டத்தில் டிசம்பா் 26- இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்!
திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வரும் டிசம்பா் 26- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடுமலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வரும் டிசம்பா் 26- ஆம் தேதி காலை 9 மணி முதல் டிசம்பா் 27- ஆம் தேதி காலை 9 மணி வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் மற்றும் முதல்நிலைத் துறை தலைமை அலுவலா்கள் தங்கியிருந்து அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறியவுள்ளனா்.
இதன்படி, டிசம்பா் 26- ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் வட்டார வளா்ச்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா்கள் அலுவலகங்கள், இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் மக்களிடமிருந்து மனுக்களைப் பெறவுள்ளனா். பின்னா் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அலுவலா்களின் களஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையில் உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக் கொள்கின்றனா். ஆகவே உடுமலை வட்டத்துக்கு உள்பட்ட பொதுமக்கள் இந்த முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.