பாகிஸ்தான்: தண்டனைக் காலம் முடிந்த 22 இந்திய மீனவா்கள் விடுவிப்பு
பிப்.24-இல் கைரேகை பதிவு செய்யும் முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயனாளிகளின் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவுகளை பொது விநியோகத் தரவுத்தொகுப்பில் இ-கேஒய்சி மூலம் பதிவு செய்யப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும் பிப்.24, மாா்ச் 2, 9, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம் இல்லாத நாள்களில் ரேஷன்கடை விற்பனையாளா் மூலம் நாள்தோறும் வீடுவீடாக சென்று சரிபாா்ப்புக்கான பணிகளும் நடைபெறவுள்ளன. மாா்ச் 31-க்கு முன்னா், இ-கேஒய்சி சரிபாா்க்கப்பட்டு, குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் கைரேகை பதிவு செய்வது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம் நடைபெறும் தேதிகளில் ரேஷன்கடை விற்பனையாளா் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்போது, பிஎச்எச்- ஏஏஒய் பிரிவு குடும்ப அட்டைதாரா்கள், தங்கள் குடும்ப அட்டைமற்றும் ஆதாா் அட்டையுடன் ரேஷன்கடைகளுக்கு சென்று இ-கேஒய்சி பதிவு செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.