செய்திகள் :

பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து!

post image

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நாளை பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மிரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். அப்போது ஆயுதமேந்தி இந்தப் பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 2 உள்நாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப். 24) கான்பூர் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கான்பூரில் ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி கான்பூர் செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெஹல்காம் தாக்குதல்: ஆப்கன் அரசு கண்டனம்!

பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியான நிலையில், இந்தத் தா... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்., அழைப்பு

பெஹல்காம் தாக்குதல் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, தில்லி தலைமை அலுவலகத்தில் நாளை (ஏப். 24) காலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு உற... மேலும் பார்க்க

கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாகும் காஷ்மீர் மக்களை நினைத்தால்... ஆண்ட்ரியா வேதனை!

பெஹல்காம் தாக்குதல் மற்றும் காஷ்மீர் மக்கள் குறித்து நடிகை ஆண்ட்ரியா வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்!

ஜம்மு - காஷ்மீரில் நாளை (ஏப். 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். தலைநகரான ஸ்ரீநகரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பெஹல்காம் தீவிர... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தை மூடத் திட்டம்? மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. ஜம்மு-கா... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்!

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாத குழு... மேலும் பார்க்க