விஜய்க்கு வந்ததை விட ரஜினி, அஜித்தை பார்க்க கூட்டம் வரும்: கே.டி.ராஜேந்திர பாலாஜ...
பிரதமர் மோடியின் தாயார் அவமதிப்பு! ஆர்ஜேடி மீது பாஜக குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) சார்பில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவமதிக்கப்பட்டதாகக் கூறி, ஒரு விடியோவை பாஜக வெளியிட்டது.
இருப்பினும், கட்சித் தொண்டர்களின் இந்த அவமதிப்பு நடவடிக்கையை கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரித்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியது.
இதுகுறித்து, பாஜக வெளியிட்ட பதிவில்,
``ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுக்கு ஒரு திட்டம் உள்ளது. அது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை துஷ்பிரயோகம் மற்றும் அவமதித்தல். இது தாய்மார்களின் உச்சபட்ச விரக்தியை தூண்டியுள்ளது.
ஆனால், ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிகார் ஒருபோதும் மறக்காது. பிகாரின் அனைத்து தாய்மார்களும் சகோதரிகளும் இதற்கு பதிலளிப்பர்’’ என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பாஜக வெளியிட்ட விடியோவை மறுத்த ஆர்ஜேடி,
``கட்சியின் எந்தவொரு தொண்டரோ வேறு யாரும் பிரதமரை அவதூறாகப் பேசவில்லை. பாஜக பகிர்ந்துள்ள விடியோவில், தேஜஸ்வி பேசுவதைக் கேட்க முடியவில்லை. இதன்மூலம், ஆர்ஜேடியின் மீது அவதூறு பரப்பும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக விடியோவை பாஜக சித்திரித்துள்ளனர்’’ என்று பதிலளித்துள்ளனர்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!