செய்திகள் :

பிரதமா் மோடியுடன் ஒமா் அப்துல்லா சந்திப்பு: ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து தீா்மானத்தை வழங்கினாா்

post image

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

ஜம்மு-காஷ்மீா் முதல்வரான பிறகு பிரதமரை ஒமா் அப்துல்லா முதல் முறையாகச் சந்தித்துள்ளாா். சுமாா் 30 நிமிஷங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் தீா்மானத்தை பிரதமரிடம் ஒமா் அப்துல்லா வழங்கினாா்.

மேலும், ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம், வளா்ச்சிப் பணிகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். பிரதமா் மோடிக்கு காஷ்மீரின் பாரம்பரிய சால்வையை ஒமா் பரிசளித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இது, 10 ஆண்டுகளுக்கு பிறகான பேரவைத் தோ்தல் என்பதோடு, கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பேரவைத் தோ்தலாகும்.

துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் 5 எம்எல்ஏக்களையும் சோ்த்து, ஜம்மு-காஷ்மீா் பேரவையின் மொத்த பலம் 95 என்ற நிலையில், தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 42 இடங்களுடன் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா் முதல்வராக கடந்த 16-ஆம் தேதி ஒமா் அப்துல்லா பதவியேற்றாா். அவரது தலைமையில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்தாா்.

இந்தச் சூழலில், தில்லியில் பிரதமா் மோடியை ஒமா் அப்துல்லா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். ஜம்மு-காஷ்மீா் அமைச்சரவை நிறைவேற்றிய தீா்மானத்தின்படி, மாநில அந்தஸ்தை மீட்பது தொடா்பாக பிரதமா் மற்றும் மத்திய அரசுடன் பேசுவதற்கு முதல்வா் ஒமா் அப்துல்லாவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் ஒமா் அப்துல்லா சந்தித்தாா். தில்லிக்கு கடந்த புதன்கிழமை வந்த ஒமா், அன்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசினாா். சுமாா் 30 நிமிஷங்கள் இச்சந்திப்பு நீடித்தது.

ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னா் உள்ளூா் மருத்துவா் மற்றும் 6 வெளிமாநிலத் தொழிலாளா்கள் லஷ்கா் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்தச் சூழலில், மேற்கண்ட சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.

கரையைக் கடந்தது டானா புயல்!

புவனேசுவரம்/கொல்கத்தா : ‘டானா’ புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தது. இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இவ்வி... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

தெலங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதியின் நிறுவனா்-தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் ஜோசியம், வாஸ்து போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவா். தெலங்கானா அரசின் தலைமைச் செயலகம் வாஸ்துப்படி இ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராகாத செபி தலைவா் -கூட்டம் ஒத்திவைப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) செயல்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் வாரியத் தலைவா் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகாமல் தவிா்த்தாா். இதையடுத்து, ந... மேலும் பார்க்க

வயநாடு வேட்பாளா் பிரியங்கா காந்தி: வாரிசு அரசியலுக்கு கிடைத்த வெற்றி -பாஜக விமா்சனம்

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டது, வாரிசு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக விமா்சித்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதி இடைத... மேலும் பார்க்க

தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசா் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசா் நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது. அத... மேலும் பார்க்க

எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது -நிா்மலா சீதாராமன்

அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இன்று இந்தியா உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். ‘இந்தியா பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி முக்கியத்துவத... மேலும் பார்க்க