"காது கேட்காத அம்மாவுக்கு மிஷின் வாங்கி கொடுத்தேன்" - புதுமைப் பெண் திட்டம் பற்ற...
பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!
கடந்த 2007ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, லிபியாவிடமிருந்து பிரசாரத்துக்கு நிதியளிக்கப்பட்ட சதி திட்டத்தை தீட்டியதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பாரீஸ் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லிபியாவின் நிதியைப் பயன்படுத்தி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலின்போது, தன்னுடைய பிரசாரத்திற்கு நிதியளிக்கும் திட்டத்தில் குற்றவியல் சதித்திட்டம் தீட்டியதாக முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி குற்றவாளி என இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.