செய்திகள் :

பிரிஸ்பேன் டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

post image

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அசத்தலான சதத்தால் வலுவான நிலையில் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 32-ஆவது சதத்தை எட்டியிருக்கும் ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் (10) விளாசியவா் என்ற பெருமையை பெற்று, இங்கிலாந்தின் ஜோ ரூட்டுடன் சமன் செய்திருக்கிறாா்.

முதல் செஷனில் அசத்திய இந்திய பௌலா்கள், பின்னா் தடுமாற்றத்தை சந்தித்தனா்.

இந்தியாவின் ஃபீல்டிங் அமைப்புமே கேள்விக்குள்ளானது. ஸ்மித், ஹெட் உள்பட 5 பேரின் விக்கெட்டை சரித்து வழக்கம்போல் ஜஸ்பிரீத் பும்ரா அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தை திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

கிரிக்கெட் வீரர் கான்வேக்கு பெண் குழந்தை!

கேஎல் ராகுலை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

இதையடுத்து 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 394 ரன்கள் பின்தங்கியிருக்கிறது.

எஞ்சிய இரண்டு நாள்கள் மட்டும் உள்ள நிலையில் இந்திய அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸும், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸும் இன்னும் விளையாட வேண்டியிருப்பதால் இந்த டெஸ்ட் பெரும்பாலும் டிராவில் முடிய வாய்ப்புள்ளது.

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: ஆப்கன் அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீத்கான் மீண்... மேலும் பார்க்க

3-வது டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டால்..! இந்திய அணி இறுதிச்சுற்று வாய்ப்பு எப்படி?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கிறது.இந்தத் தொடரு... மேலும் பார்க்க

வெற்றிப் பாதையில் நியூஸி.! இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 658 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது.இந்தத் ... மேலும் பார்க்க

வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு பந்துவீசத் தடை விதித்த ஐசிசி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச வங்கதேச கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெற்... மேலும் பார்க்க

தந்தையானார் டெவான் கான்வே!!

நியூசிலாந்து வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரருமான டெவான் கான்வேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர்களின் ஒருவரான டெவான் கான்வே, கடந்... மேலும் பார்க்க

கிரிக்கெட் வீரர் கான்வேக்கு பெண் குழந்தை!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கான்வேக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட்டின் முன்னணி வீரர் டெவன் கான்வே தனது தனது நீண்டகால காதலியான கிம் வாட்சனை கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென... மேலும் பார்க்க