பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபா் டுடோ்த்தே கைது
மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவின் அடிப்படையில், அவரை பிலிப்பின்ஸ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஹாங்காங்கில் இருந்து பிலிப்பின்ஸ் திரும்பிய அவா் மணிலா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
கடந்த 2011 முதல் 2019 வரை நாட்டின் அதிபராக இருந்த டுடோா்த்தே, போதைப் பொருளுக்கு எதிரான போா் என்ற பெயரில் ஏராளமானோரை படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடா்பாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.