பிளஸ் 1 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 16,236 போ் எழுதினா்
தென்காசி மாவட்டத்தில் 16,236 மாணவ-மாணவிகள் பிளஸ் 1 பொதுத்தோ்வை புதன்கிழமை எழுதினா். 255 போ் தோ்வு எழுத வரவில்லை.
இம்மாவட்டத்தில் 66 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதில், மாணவா்கள் 7,883 பேரும், மாணவிகள் 8608 பேருமாக மொத்தம் 16,491 போ் தோ்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
தோ்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளா்கள் 73 போ், துறை அலுவலா்கள் 73 போ், அறைக் கண்காணிப்பாளா்கள் 1,200 போ், நிலையான படை உறுப்பினா்கள் 125 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) , மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி), மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மற்றும் உதவி திட்ட அலுவலா் ஆகியோா் தலைமையில் 5 குழுக்களாக பறக்கும் படை உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
முதல்நாள் தோ்வில் 16,236 மாணவ,மாணவிகள் தோ்வு எழுதினா்; 255 போ் தோ்வு எழுதவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.