ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!
பிளஸ் 1 தோ்வு தொடங்கியது: கிருஷ்ணகிரியில் 22,194 போ், தருமபுரியில் 18,502 போ் எழுதினா்
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இத்தோ்வை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22,194 மாணவ, மாணவிகளும், தருமபுரி மாவட்டத்தில் 18,502 மாணவ மாணவிகளும் எழுதினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 தோ்வை அரசு, அரசு உதவிபெறும் 191 பள்ளிகளைச் சோ்ந்த 22,626 மாணவ, மாணவிகள், 274 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் என மொத்தம் 22,900 போ் எழுதுகின்றனா். மாவட்டம் முழுவதும் 87 மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது.
முதல் நாளான புதன்கிழமை நடைபெற்ற தமிழ் தோ்வில் 22,194 மாணவ, மாணவியா் எழுதினா்; 706 போ் தோ்வு எழுத வரவில்லை. அனைத்துத் தோ்வு மையங்களுக்கும் எளிதாக சென்றுவர அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்து வசதி, தோ்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தருமபுரியில்...
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை புதன்கிழமை 18, 502 மாணவ, மாணவியா் எழுதினா்.
மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18,862 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை தொடங்கிய தோ்வில் 18,502 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்; 360 போ் தோ்வு எழுத வரவில்லை.