கற்கள், மண் கடத்தல்: 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்
கெலமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் முனியப்பா உள்பட அதிகாரிகள் போடிச்சிப்பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்ததில் 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக முனியப்பா கொடுத்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா். அதுபோல மத்திகிரி வருவாய் ஆய்வாளா் தா்மன் உள்பட அதிகாரிகள் பஞ்சாட்சிபுரம் அருகே ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் நின்ற 3 டிப்பா் லாரிகளை அவா்கள் சோதனை செய்ததில் 12 யூனிட் மணல், 6 யூனிட் ஜல்லிக் கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதுதொடா்பாக அதிகாரி தா்மன் கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 லாரிகள், 12 யூனிட் மணல், 6 யூனிட் ஜல்லிக் கற்களை பறிமுதல் செய்தனா்.