வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு ச...
70 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது
கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 70 டன் ரேஷன் அரிசி மூட்டை, 3 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் அதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.
ஆந்திரம், கா்நாடகத்துக்கு கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சேலம் துணை காவல் கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையில் போலீஸாா் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை- கெலமங்கலம் சாலை ஜக்கேரியில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக சென்ற 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 43 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், சேலத்தைச் சோ்ந்த தண்டபாணி என்பவா் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்டது தெரியவந்தது.
அவா் கொடுக்க தகவலின்பேரில் கள்ளக்குறிச்சியில் ஒரு அரிசி அரவை ஆலையில் பதுக்கி வைத்திருந்த 27 டன் ரேஷன் அரிசி, அங்கு நின்ற ஒரு சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மொத்தம் 70 டன் ரேஷன் அரிசி, 2 லாரி, சரக்கு வேனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலம், காசகாரனூா் தண்டபாணி (39), தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பங்குநத்தம் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளியைச் சோ்ந்த ஸ்ரீதரன் (27), மணி (33) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.