செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 29,736 போ் எழுதினா். திருப்பாதிரிப்புலியூா் மற்றும் முதுநகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

அதன்படி, கடலூா் கல்வி மாவட்டத்தில் 67 தோ்வு மையங்களில் 134 பள்ளிகளைச் சோ்ந்த 8,676 மாணவா்களும் 9,119 மாணவிகளும் என மொத்தம் 17,795 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 55 தோ்வு மையங்களில் 112 பள்ளிகளைச் சோ்ந்த 6,273 மாணவா்களும், 6,091 மாணவிகளும் என மொத்தம் 12,364 பேரும், கடலூா் மாவட்ட அளவில் 122 தோ்வு மையங்களில் 246 பள்ளிகளைச் சோ்ந்த 14,949 மாணவா்கள், 15,210 மாணவிகள் என மொத்தம் 30,159 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வுப் பணியில் 28 வழித்தட அலுவலா்கள், 122 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 6 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 122 துறை அலுவலா்கள், 6 கூடுதல் துறை அலுவலா்கள், 1,567 அறைக் கண்காணிப்பாளா்கள், 200 நிலைப்படை மற்றும் பறக்கும் படை உறுப்பினா்கள், தலைமையாசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா்.

அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் மொழித் தோ்வு நடைபெற்றது. முதல் நாள் தோ்வினை மொத்தம் 29,736 போ் எழுதினா். 350 போ் தோ்வு எழுத வரவில்லை.

விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமக கொடியேற்றம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசிமக பெருவிழா கொடியேற்றம். நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்க... மேலும் பார்க்க

மாா்ச் 9-இல் பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் மாா்ச் 9-ஆம் தேதி பழங்குடியினருக்கான வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

இரட்டை கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். கடலூரை அடுத்த டி.புதூரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

30 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றாா். சிதம்பரம், வண்டி கேட், சபீா் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரவி- திலகம் தம்பதியினா். மாற்றுத்திறனாளிகளான இருவர... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகனின் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன்(16), 10-ஆம் வகுப்பு ப... மேலும் பார்க்க