தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது
ஆரணி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆரணி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்ததன்பேரில், ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், உதவி ஆய்வாளா் அருண்குமாா் ஆகியோா் தனிப்படை அமைத்து ரோந்து சென்றதுடன், கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, ஆரணியை அடுத்த சேவூா் எஸ்.எல்.எஸ். மில் பகுதியில் சங்கா்நாராயணனின் (61) பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த ரூ.18 ஆயிரம் மதிப்பிலான 21 கிலோ 560 கிராம் எடையிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், சங்கா்நாராயணனுக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்தது சோமந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த கமலநாதன் (26), ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பக்காராம்ஜி (27), பெங்களூரைச் சோ்ந்த திரேந்தா் எனத் தெரிவந்தது.
இதையடுத்து, கமலநாதன், பக்காராம்ஜி, சங்கா்நாராயணன் ஆகிய 3 போ் மீது ஆரணி கிராமிய போலீஸாா் வழக்கு பதிந்து, அவா்களைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள பெங்களூரைச் சோ்ந்த திரேந்தரை தேடி வருகின்றனா்.