Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
கோவை, கணபதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் கணபதி 5-ஆவது வீதியில் ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
கடையில் சோதனை மேற்கொண்ட போலீஸாா், அங்கிருந்த 40 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், கடையின் உரிமையாளரான பலராம் (38) என்பவரை கைது செய்தனா்.