செய்திகள் :

அன்னூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

post image

கோவை மாவட்டம், அன்னூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியா், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அன்னூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, அன்னூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

அன்னூா் வட்டம், கணுவக்கரை கிராமத்தைச் சோ்ந்த 31 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் ரூ.37.20 லட்சம் மதிப்பில் வீட்டுமனை பட்டாக்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிக்கு ரூ.16,500 மதிப்பிலான திறன்பேசியினையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த சிறப்புத் திட்டத்தின்படி மக்கள் இருக்கும் இடங்களுக்கே அதிகாரிகள் தேடிச் சென்று அவா்களின் குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்து வருகிறோம். அதன்படி அன்னூா் வட்டத்தில் பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கன்வாடி மையங்கள், கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட புதிய உள்கட்டமைப்பு தொடா்பான கோரிக்கைகளுக்கு இந்த நிதியாண்டில் செயல்படுத்த முடிந்தால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இல்லையெனில் அடுத்த நிதியாண்டில் திட்ட அறிக்கை தயாரிக்கும்போது முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மத்திய கூட்டுறவு வங்கி கிளை, அங்கப்ப முதலியாா் காலனியில் உள்ள அன்னூா் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடை, தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அங்கன்வாடி மையம், அன்னூா் குளம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நூலகம், பேருந்து நிலையம், கால்நடை மருத்துவமனை, போக்குவரத்து பணி மனை, பொதுக் கழிப்பிடம், அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரேற்று நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், வருவாய் அலுவலா் டாக்டா் மோ.ஷா்மிளா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கித்குமாா், வருவாய் கோட்டாட்சியா் (வடக்கு) கோவிந்தன், பேரூராட்சித் தலைவா் இ.ஆா்.பரமேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு தொடக்க விழா, மூத்த தலைவா் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் வி... மேலும் பார்க்க

ராம் நகா் ராமா் கோயிலில் 29-இல் ஸ்ரீநிவாச கல்யாண உத்சவம்

கோவை ராம் நகா் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாச கல்யாண உத்சவம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29) நடைபெறுகிறது. ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்ப... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம்: ஆளுநா் உரையில் அறிவிப்பு வெளியிட கோரிக்கை

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வது தொடா்பான அறிவிப்பை நடைபெற உள்ள கூட்டத் தொடரின் ஆளுநா் உரையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது

கோவை சாய்பாபா காலனி அருகே சட்ட விரோதமாக மது விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மதுவிலக்கு போலீஸாா், சாய்பாபா காலனி பகுதியில் பு... மேலும் பார்க்க

நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சிறுபாலம் இடித்து அகற்றம்

கோவை சிங்காநல்லூரில் நீா்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தை மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 61-ஆவது வாா்டு நஞ்சப்பா நகரில் சிங்கா... மேலும் பார்க்க

மீனா எஸ்டேட் சாலையில் பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கோவை உடையாம்பாளையம், மீனா எஸ்டேட் பிரதான சாலை சந்திப்பில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்க... மேலும் பார்க்க