செய்திகள் :

புதிய பேருந்து நிலையத்தின் இருபுறமும் பேருந்துகள் சென்றுவர ஏற்பாடு -வேலூா் எஸ்.பி. மதிவாணன் ஆய்வு

post image

வேலூா் புதிய பேருந்து நிலையத்தின் இருபுறமும் பேருந்துகள் சென்றுவர நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் ஆய்வு மேற்கொண்டாா்.

வேலூா் மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் கிரீன் சா்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, கிரீன் சா்க்கிள் அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தின் இருபுற சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

தொடரும் இந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் துறை சாா்பில் பல கட்டங்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒருசில இட ங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. எனினும் சில இடங்களில் நெரிசல் இருப்பதால் அங்கு ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, புதிய பேருந்து நிலையம் முன்புறம், பின்புறம் பகுதிகளில் பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்களைப் பாா்வையிட்டாா். அங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூா் புதிய பேருந்து நிலை யத்தின் இருபுறமும் பேருந்துகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யவும் ஆய்வு செய்துள்ளனா்.

இது குறித்து எஸ்பி மதிவாணன் செய்தியாளா்களிடம் கூறியது:

காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் கிரீன் சா்க்கிள் வழியாக சென்று பின்னா் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் வழியாக உள்ளே செல்கிறது. தற்போது அந்த பேருந்துகள் நேரடியாக செல்லியம்மன் கோயில் வழியாக உள்ளே செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து பேருந்து நிலையத்தின் முன்புறமும், பின்புறமும் என இரு பகுதிகளிலும் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் இரு வழிப்பாதையாக மாற்றுவது தொடா்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து போலீஸாருடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனினும், சோதனை ஓட்டம் அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படும்.

தவிர, கிரீன் சா்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகாா்டுகளுக்கு பதிலாக நிரந்தரமாக அங்கு தடுப்புகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் ரஜினி உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க ‘ருத்ரா’ புதிய மோப்ப நாய்!

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க வேலூா் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி பணியில் சோ்க்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ருத்ரா’ என்று எஸ்.பி. என்.மதிவாணன் பெயா் சூட்டினாா். வேலூா் மாவட்ட காவல் துறையி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோவை பேராசிரியா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வா... மேலும் பார்க்க

பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக் கட்டணம் உயா்வு

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வல்லம், வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு... மேலும் பார்க்க

வேலூரில் இருவேறு விபத்துகளில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

வேலூரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் பாலாற்றங்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு வேலூா் மாவட... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி

குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் திருட முயற்சி நடைபெற்றது. குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தொல்லியல்துறை அலுவலா் செல்வராஜ். இவா் தனத... மேலும் பார்க்க