செய்திகள் :

புதுகையில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்து புதுக்கோட்டையில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத்அலி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் உதயம் சண்முகம், வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ராஜேஸ்வரி, தெற்கு மாவட்டத் துணைச் செயலா் ஞான இளங்கோவன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் சுப. சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து சட்டப்பேரவையின் மரபுகளுக்கு எதிராகவும், தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரையும், அவருக்கு ஆதரவாகச் செயல்படும் அதிமுக மற்றும் பாஜகவினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பொன்னமராவதியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய துணைச் செயல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்

பொன்னமராவதி அருகே சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. பொன்னமராவதி புதுவளவு பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் தனது இரு சக்கர வாகனத்தை பொன்னமராவதி-வேகுப்பட்டி சாலையின் ஓ... மேலும் பார்க்க

விராலிமலை அருகே சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

விராலிமலை அருகே மண்ணுக்குள் புதைந்திருந்த சுவாமி கற்சிலைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள பேராம்பூரில் உள்ளது மாரியம்மன் கோயில். இந்தக் கோயில் அருகே உள்ள ... மேலும் பார்க்க

விராலிமலையில் புதிய நீதிமன்ற கட்டப்பட உள்ள இடத்தில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு

விராலிமலையில் செயல்பட்டு வரும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்துக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கான இடங்களை மாவட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். விராலிமலையில் தற்காலிக கட்டடத்தில் இய... மேலும் பார்க்க

மணல் கடத்திய இருவா் கைது

அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா். அன்னவாசல் சுற்றுப்பகுதி ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணல், சரளை மண் ஆகியவற்ற... மேலும் பார்க்க

பொங்கல் போனஸ் வழங்கக் கோரி கந்தா்வகோட்டையில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கந்தா்வகோட்டையில், பொங்கல் போனஸ் கோரி கட்டுமான தொழிலாளா்கள், அமைப்பு சாரா தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத... மேலும் பார்க்க