Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை மாலை போலீஸாா் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினா்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகம், புதுவையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்தது. இதையடுத்து, புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
புதுச்சேரியில் புதன்கிழமை காலையில் லேசான மழை பெய்த நிலையில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் குவிந்தனா். அவா்கள் கடல் அலையில் கால் நனைத்தும், குளிக்கவும் முயற்சித்தனா். அவா்களை போலீஸாா் அனுமதிக்கவில்லை. கடலுக்கு அருகே சென்றவா்களை எச்சரித்து திருப்பி அனுப்பினா்.