செய்திகள் :

புதுச்சேரி மக்களுக்கு புத்தாண்டில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்!

post image

புதுச்சேரியில், பெட்ரோல், டீசல் மீது வாட் வரி உயர்த்தப்பட்டதையடுத்து லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. புத்தாண்டு பரிசாக இன்று முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது.

புதுச்சேரியில் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி கடந்த 2021-ம் ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது. அப்போது லிட்டருக்கு 7 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.

தற்போது பெட்ரோல் மீதான வாட் வரி 2.44% மற்றும் டீசல் மீதான வாட் வரி 2.57% என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கடந்த 27-ம் தேதி வெளியிட்டார்.

இந்த விலை உயர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என யூனியன் பிரதேசம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் படி பெட்ரோல் வாட் வரியானது புதுச்சேரியில் 16.98%, காரைக்கால் - 16.99%, மாகி- 15.79%, ஏனாம் 17.69% என உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் டீசல் மீதான வரி 2% என அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை விவரம்:

புதுச்சேரியில் ரூ.94.26-ல் இருந்து ரூ.96.24 எனவும், காரைக்காலில் ரூ. 94.03-ல் இருந்து 96.03 எனவும், மாகேவில் ரூ.91.92-ல் இருந்து ரூ.93.92 எனவும், ஏனாமில் ரூ.94.92-ல் இருந்து ரூ.96.92 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல் டீசல் விலையும் இரண்டு ரூபாய் உயர்ந்து புதுச்சேரியில் ரூ. 86.47 எனவும், காரைக்காலில் ரூ.84.35, மாகியில் ரூ.81.90, ஏனாமில் ரூ.84.75 என உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டு ரூபாய் உயர்ந்தாலும் அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்களை விட விலை குறைவு என்பது குறிப்பிடதக்கது.

பேரவையை அவமதித்துவிட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றாமல், வெளியேறியதன் மூலம், தமிழக பேரவையை அவமதித்துவிட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி என்று அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.சட்டப்பேரவையில் இன... மேலும் பார்க்க

சட்டப்பேரவையில் நடந்தது என்ன? - அப்பாவு பேட்டி

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஏன் வெளியேறினார் என பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத்தொடா்... மேலும் பார்க்க

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல்

விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவி... மேலும் பார்க்க

அச்சிடப்பட்ட ஆளுநர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும்: தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஆளுநர் வெளியேறவில்லை.. திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழக சட்டப்பேரவையை ஆளுநர் புறக்கணித்துச் செல்லவில்லை, திட்டமிட்டு வெளியேற வைக்கப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இ... மேலும் பார்க்க

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார்: அமைச்சர் துரைமுருகன்

பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் அவர் பேசியதாவது, பேரவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆ... மேலும் பார்க்க