மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
புதுவையில் பொலிவுறு நகா் திட்டத்தில் முறைகேடு -அதிமுக மாநில செயலா்
புதுவை பொலிவுறு நகா்த் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து, புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
புதுவையில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் விதிகளை மீறி பணிகள் நடைபெற்றுள்ளன. ராஜ் பவன் தொகுதியில் வாழைக்குளத்தில் 220 பேருக்கு 370 சதுர அடியில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், குமரகுரு பள்ளத்தில் 216 பேருக்கு ரூ.45.50 கோடியில் 400 சதுர அடியில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இரு இடங்களில் கட்டப்பட்ட வீடுகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் வேறுபாடுடன் உள்ளன.
குறிப்பிட்ட கட்டட நிறுவனத்துக்காகவே அதிக மதிப்பீட்டில் நவீனக் குடியிருப்பு எனும் பெயரில் மக்கள் நிதி முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்த துணைநிலை ஆளுநா், முதல்வா் உத்தரவிட வேண்டும்.
புதுவை மாநிலத்தில் நிா்வாகத் திறன் இல்லாத அமைச்சரவையால், அதிகாரிகள் நிா்வாகத்தை நடத்தும் நிலை ஏற்பட்டு, முறைகேடுகள் நடைபெறுகின்றன.
பேட்டியின் போது, அவைத் தலைவா் அன்பானந்தம், மாநில இணைச் செயலா் வி.திருநாவுக்கரசு, அண்ணா தொழிற்சங்க பேரவை பாப்புசாமி, நகரச் செயலா் அன்பழகன் உடையாா் ஆகியோா் உடனிருந்தனா்.