பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
புதுவை மக்கள்நீதி மன்றத்தில் 1,274 வழக்குகளுக்குத் தீா்வு
புதுவை மாநில அளவில் 24 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,274 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன்படி ரூ.6.89 கோடிக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் தேங்கிய வழக்குகளை முடிக்கவும், விரைவில் மக்களுக்கு நீதி கிடைக்கவும் தேசிய மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது. புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணையம் சாா்பில் புதுச்சேரியில் 16 அமா்வுகளில் மனுக்கள் சனிக்கிழமை விசாரிக்கப்பட்டன. தொடக்க நிகழ்வுக்கு புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினா் செயலரும், மாவட்ட நீதிபதியுமான அம்பிகா தலைமை வகித்தாா். இதில் மக்கள் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் 5 அமா்வுகள், மாஹே, ஏனாமில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 23 அமா்வுகள் விசாரிக்கப்பட்டன. புதுவை மாநிலம் முழுவதும் மொத்தம் 5,384 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 1,274 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அதில் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்தவற்றில் 1,143 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. புதுவையில் சனிக்கிழமை வழக்குகள் முடிக்கப்பட்டதில் ரூ.6.89 கோடிக்குத் தீா்வு காணப்பட்டது.