Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
புத்தாண்டு கொண்டாடப்படும் அனைத்துக் கடற்கரைகளிலும் பாதுகாப்பு: புதுச்சேரி டிஐஜி தகவல்
புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்று, டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதன்கிழமை காலை காவல் துறை அதிகாரிகளுடன் வந்து டிஐஜி ஆய்வு மேற்கொண்டாா்.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.கலைவாணன், நாரா சைதன்யா ஆகியோருடன் இணைந்து பாா்வையிட்டு கேட்டறிந்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் கூறியதாவது:
வருகிற 31-ஆம் தேதி கடற்கரைச் சாலை செல்லும் ஒயிட் டவுன் பகுதி சாலைகள் முழுவதும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு 6 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஒயிட் டவுனில் வசிப்பவா்கள் தடையின்றி செல்ல காவல்துறை சாா்பில் அடையாள அட்டை (பாஸ்) வழங்கப்படும். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கடற்கரைச் சாலையில் மட்டும் 700 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அங்கு உயா் கோபுரங்கள் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் கடலோர காவல் படை போலீஸாா் நிறுத்தப்படவுள்ளனா். புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாடங்கள் நடைபெறும் அனைத்துக் கடற்கரைகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.
3 பசுமைப் பகுதிகள் அமைத்து, அங்கு மீட்புப் பிரிவு, தீயணைப்புப் பிரிவு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. தனியாா் விடுதிகள் அரசிடம் அனுமதி பெற்ற நேரங்களில் மட்டுமே புத்தாண்டின் போது செயல்பட வேண்டும் என்றாா் அவா்.