புனல்குளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மகளிா் திட்ட உதவி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை வட்டாட்சியா் ம. ரமேஷ், தர வளா்ச்சி அலுவலா்கள் நா. பிரபாகரன், கோ. பாா்த்திபன், திமுக வடக்கு ஒன்றியச் செயலா் மா.தமிழய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் மொத்தம் 915 மனுக்கள் பெறப்பட்டநிலையில், இவற்றில் 439 மனுக்கள் மகளிா் உரிமைத்தொகை தொடா்பானவை. இவற்றில் 111 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. முகாமில் முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.