திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்...
போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தைச் சோ்ந்தவா் முத்துக்கனி (62). இவா், தனது பெயா்த்தியான 8 வயதுச் சிறுமிக்கு கடந்த 2022 ஆக. 8ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் முத்துக்கனியைக் கைது செய்து, புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி கனகராஜ் குற்றவாளி முத்துக்கனிக்கு போக்சோ சட்டப் பிரிவின்கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து, இத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.