திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்...
பொன்னமராவதியில் மக்கள் நீதிமன்ற முகாம்
பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் மக்கள் நீதிமன்ற முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி சந்திரன் உத்தரவின்படியும், மாவட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவா் ராஜேந்திரகண்ணன் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற முகாமுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பிச்சை தலைமை வகித்தாா். வழக்குரைஞா் பிஎல். ரெங்கராஜ், சமூக ஆா்வலா் ஸ்டெல்லா மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதியுமான சி. பழனிவேல்ராஜன் தொடங்கி வைத்தாா்.
முகாமில் இந்தியன் வங்கிகளில் உள்ள தனிநபா் கடன், விவசாயக் கடன், தொழில் கடன், கல்விக்கடன் உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காணப்பட்டது. முகாமில் இந்தியன் வங்கி மேலாளா், பணியாளா்கள், வட்ட சட்டப்பணிகள் குழு தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.