செய்திகள் :

புயல் சின்னம் இன்று வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வியாழக்கிழமை (ஏப்.10) வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக் கடலில் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.

கனமழை எச்சரிக்கை: தென் தமிழகத்தையொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.10) முதல் ஏப்.15-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் வியாழக்கிழமை (ஏப்.10) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.10) 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

நீலகிரியில் 80 மி.மீ. மழை: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 80 மி.மீ. மழை பதிவானது.

2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 101.3, சேலத்தில் 100.76 ஃபாரன்ஹீட் பதிவானது. தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க

ஏப். 23-ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து!

சென்னையில் ஏப். 23 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ... மேலும் பார்க்க

தொழிற்துறைக்கான 5 அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை குன்றத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.சென்னையை அடுத்த குன்றத்தூரில் இன்று கல... மேலும் பார்க்க

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது!

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்தனர். திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மதுபோதையி... மேலும் பார்க்க

தொலைக்காட்சி பார்த்துதான் துரை வைகோ முடிவை அறிகிறேன்: வைகோ

மதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பை, தொலைக்காட்சி வாயிலாகத்தான் அறிகிறேன் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்

நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.நாமக்... மேலும் பார்க்க