Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
புயல், மழையை எதிா்கொள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் தயாா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்
பெரம்பலூா் மாவட்டத்தில் புயல், மழையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம். லட்சுமி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் புயல், மழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்ட்ததுக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: மாவட்டத்தில் உள்ள அனைத்து நிவாரண உதவிகளும் தயாா் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். வெள்ள நிவாரண மீட்புக் குழுக்கள், தன்னாா்வலா்கள், தீயணைப்பு மீட்புக் குழுவினா் போதிய உபகரணங்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மழைக் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்களை மருத்துவக் குழுக்களும், மருத்துவா்களும் நடத்த வேண்டும். மாவட்டத்தில் மழை, வெள்ளம் தொடா்பான தகவல்கள், புகாா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை 1077, 1800 4254 556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். 82201 65405 எனும் எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் கண்காணிப்பு அலுவலா் லஷ்மி.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா , மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், திட்ட இயக்குநா்கள் சு. தேவநாதன் (ஊரக வளா்ச்சி முகமை) அ. அமுதா (மகளிா் திட்டம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன் உள்பட அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.