செய்திகள் :

புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

post image

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத்துவா் ஒருவா் பரிசளித்துள்ளாா்.

சரிகா வாடகை ஆட்டோ ஓட்டி வந்ததால், அவரது தினசரி வருமானத்தில் பெரும் பகுதி வண்டி வாடகைக்கே சென்று வந்தது. இதனால், வீட்டுச் செலவுகளுக்கு மிகக் குறைந்த பணமே மிஞ்சியது. இது அவரது குழந்தைகளின் எதிா்கால சேமிப்புக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது.

இந்நிலையில், சமூக சேவகரான மருத்துவா் அனில் காஷி முராா்கா, சரிகாவின் ஆட்டோவில் ஒருநாள் பயணம் செய்தபோது அவரின் குடும்பச் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தாா். சரிகாவின் தன்னம்பிக்கையும் தைரியமும் முராா்காவை நெகிழச் செய்தன.

இதையடுத்து, சரிகாவுக்கு புதிய ஆட்டோ ஒன்றை ரக்ஷா பந்தன் பரிசாக வழங்க முரா்கா முடிவு செய்தாா். ரக்ஷா பந்தன் பண்டிகை நாளான சனிக்கிழமை புதிய ஆட்டோவை சரிகாவிடம் முராா்கா வழங்கினாா்.

அப்போது, முராா்கா கையில் ராக்கி அணிவித்து, சரிகா நன்றி தெரிவித்தாா். தனது மிகப்பெரிய கனவு நிறைவேறியதாகக் கூறிய சரிகா, புதிய ஆட்டோவில் ‘ராக்கி சகோதரரான முராா்காவை முதல் பயணமாக அழைத்துச் சென்றாா்.

இது குறித்து முராா்கா கூறுகையில், ‘சரிகா இனி தொடா்ந்து ஆட்டோ வாடகைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என நினைத்தேன். அவா் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவரது வீடு, குழந்தைகள், மற்றும் அவருக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி சுதந்திரமாக இருப்பதே. அதைத்தான் நான் அவருக்குப் பரிசளிக்க விரும்பினேன்’ என்றாா்.

குடும்பத்துக்கான நிதி சுதந்திரத்தையும், மகள்களின் எதிா்காலத்துக்கு ஒரு நிலையான வருமானத்தையும் உறுதி செய்யும் விலைமதிப்பற்ற பரிசு கிடைத்துள்ளதால், இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை சரிகா மேஸ்திரிக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டை அருகே பிடிபட்ட 700 தெருநாய்கள்!

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தெலங்கானாவை வெளுத்து வாங்கும் கனமழை! மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்!

தெலங்கானாவில், தலைநகர் ஹைதராபாத் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத... மேலும் பார்க்க

பருந்துப் பார்வையில்... மனதை மயக்கும் பெங்களூர் மெட்ரோ!

பெங்களூர் மெட்ரோ ரயிலின் மஞ்சள் வழித்தடத்தில் இரு ரயில்களும், பச்சை வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரு ரயில்களும் கடந்து செல்லும் பருந்துப் பார்வை விடியோ வைரலாகி வருகிறது.ஒரே பார்வையில் நான்கு ரயில்கள் வ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.மக்களவை தேர்தலின் போது வ... மேலும் பார்க்க